சங்கீதங்கள் 44

Psalms 44
சங்கீதம் 44

கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்.

இறைவனே, வெகுகாலத்திற்குமுன் சங் 78:3-6யாத் 13:14-15உபா 6:20நியாயாதி 6:13யோவே 1:3சங் 42:1சங் 77:5ஏசா 38:19

எங்கள் முன்னோர்களின் நாட்களில் நீர் செய்தவற்றை

அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்;

அவற்றை நாங்கள் எங்கள் காதுகளால் கேட்டிருக்கிறோம்.

நீர் உமது கரத்தால் நாடுகளை வெளியே துரத்தி, யாத் 15:17சங் 78:552 சாமு 7:10யோசு 11:23யோசு 21:43யாத் 34:11சங் 135:10-12சங் 80:8-11

எங்கள் முன்னோர்களைக் குடியமர்த்தினீர்;

நீர் அந்நாட்டினரை தண்டித்து,

எங்கள் முன்னோரைச் செழிக்கப் பண்ணினீர்.

அவர்கள் தங்கள் வாளினால் நாட்டை உடைமையாக்கவும் இல்லை, உபா 7:7-8உபா 8:17-18யோசு 24:12சகரி 4:62 கொரி 4:7உபா 4:37-38யாத் 15:16சங் 20:6

அவர்களுடைய புயத்தால் அவர்கள் வெற்றிகொள்ளவும் இல்லை;

நீர் அவர்களில் பிரியம் கொள்வதினால் உமது வலதுகரமும் உமது வலிய புயமும்

உமது முகத்தின் ஒளியுமே வெற்றிகொள்ளச் செய்தது.

இறைவனே, நீரே என் அரசன்; சங் 42:8சங் 74:12மாற் 9:25சங் 149:2சங் 89:18ஏசா 33:22மாற் 1:25-26மாற் 1:31

யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே.

உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி, சங் 108:13சங் 60:12சங் 118:10-13பிலி 4:13உபா 33:17தானி 8:4சகரி 10:5ஏசா 41:14-16

உமது பெயராலே எங்கள் எதிரிகளை மிதிப்போம்.

என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை, 1 சாமு 17:47ஓசி 1:7சங் 20:7சங் 33:16-17

என் வாள் வெற்றியைக் கொடுப்பதில்லை;

ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து, சங் 136:24சங் 140:7யோசு 1:5யோசு 23:9-10சங் 132:18யோசு 10:42சங் 144:10சங் 40:14

எங்கள் விரோதிகளை வெட்கப்படுத்துகிறீர்.

நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்; சங் 34:2எரே 9:241 கொரி 1:29-31ரோம 2:17ஏசா 45:25சங் 30:12சங் 115:1-18

நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம்.

இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்; சங் 60:10சங் 74:1சங் 108:11சங் 60:1சங் 43:2எரே 33:24-26புலம் 3:31-32சங் 89:38-45

நீர் எங்கள் இராணுவத்துடன் செல்வதுமில்லை.

எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்; யோசு 7:8லேவி 26:17யோசு 7:12சங் 89:41உபா 28:25ஏசா 10:61 சாமு 31:1-71 சாமு 4:17

எங்கள் விரோதிகள் எங்களைச் சூறையாடி விட்டார்கள்.

செம்மறியாடுகளைப்போல் நீர் எங்களை இரையாகக் விட்டுக்கொடுத்தீர்; உபா 4:27உபா 28:64எசேக் 34:12ரோம 8:36ஏசா 11:11-12எரே 32:372இராஜா 17:6எரே 12:3

நாடுகளுக்கு மத்தியில் எங்களைச் சிதறடித்தீர்.

நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்; எரே 15:13உபா 32:30ஏசா 52:3-4ஏசா 50:1நியாயாதி 2:14நியாயாதி 3:8நெகே 5:8-12வெளி 18:13

அவர்களை எவ்வித இலாபமுமின்றி விற்றுப்போட்டீரே.

எங்கள் அயலவருக்கு எங்களை ஒரு நிந்தையாக்கி விட்டீர்; சங் 79:4சங் 80:6எரே 24:9உபா 28:37எசேக் 36:19-23எரே 48:27சங் 123:3-4சங் 89:41

எங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு எங்களை இகழ்ச்சியும் ஏளனமும் ஆக்கினீர்.

நீர் எங்களைப் நாடுகளுக்கு நடுவில் ஒரு பழமொழியாக ஆக்கினீர்; எரே 24:92இராஜா 19:21உபா 28:37யோபு 16:4யோபு 17:6புலம் 2:15-171 இராஜா 9:72 நாளாக 7:20

மக்கள் கூட்டம் எங்களைப் பார்த்து ஏளனமாய்த் தங்கள் தலையை அசைக்கிறார்கள்.

நாள்தோறும் நான் அவமானத்தில் வாழ்கிறேன்; சங் 69:72 நாளாக 32:21எரே 51:51யோசு 7:7-9சங் 71:13எஸ்றா 9:6எரே 3:25சங் 89:45

என் முகம் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கிறது.

என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும் சங் 8:2சங் 74:10சங் 74:18சங் 74:22-23ஏசா 37:17ஏசா 37:23-24ஏசா 37:3-4சங் 79:12

பகைவர்களின் நிந்தனைகளினாலேயே வெட்கப்படுகிறேன்.

நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்; தானி 9:13உபா 6:12உபா 8:14எசேக் 16:59எசேக் 20:37ஏசா 17:10எரே 2:32எரே 31:32

உமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம்;

ஆனாலும், இவையெல்லாம் எங்களுக்கு நடந்தன.

எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை, சங் 119:51சங் 119:157யோபு 23:11-12சங் 78:57செப்ப 1:61 கொரி 15:581 இராஜா 15:5எரே 11:10

எங்கள் பாதங்கள் உமது வழியைவிட்டு விலகவுமில்லை.

ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்; சங் 23:4யோபு 3:5ஏசா 34:13-14எரே 14:17யோபு 30:29சங் 51:8எசேக் 29:3ஏசா 27:1

காரிருளினால் எங்களை மூடினீர்.

எங்கள் இறைவனின் பெயரை நாங்கள் மறந்திருந்தால், சங் 81:9யோபு 11:13உபா 6:14யோபு 31:5-40சங் 68:31சங் 7:3-51 இராஜா 8:22யாத் 9:29

அல்லது வேறுநாட்டின் தெய்வமல்லாததை நோக்கி எங்கள் கைகளை நீட்டியிருந்தால்,

இறைவன் அதைக் கண்டுபிடியாமல் இருந்திருப்பாரோ? எரே 17:10எரே 23:24பிரச 12:14யோபு 34:21-22எபி 4:12-13யோபு 31:41 கொரி 4:5சங் 139:1-24

அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிகிறவராய் இருக்கிறாரே.

ஆனாலும் உமக்காகவே நாங்கள் நாள்முழுதும் மரணத்தை சந்திக்கிறோம்; ரோம 8:36ஏசா 53:7சங் 44:111 கொரி 4:9யோவா 15:21யோவா 16:2-31 கொரி 15:30-31மத் 5:10-12

அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம்.

யெகோவாவே, எழுந்தருளும்! ஏன் நித்திரை செய்கிறீர்? சங் 7:6சங் 78:65சங் 35:23சங் 74:1சங் 77:7சங் 88:14ஏசா 51:9மாற் 4:38

விழித்துக்கொள்ளும்! எங்களை என்றென்றும் புறக்கணியாதேயும்.

நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, யோபு 13:24உபா 32:20சங் 42:9யாத் 2:23-24சங் 10:1சங் 10:11சங் 13:1சங் 43:1-4

எங்கள் துன்பத்தையும் நாங்கள் ஒடுக்கப்படுவதையும் மறந்துவிடுகிறீர்?

நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்; சங் 119:25ஏசா 51:23புலம் 4:5சங் 66:11-12

எங்கள் உடல்கள் தரையோடு ஒட்டியிருக்கிறது.

நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்; சங் 130:7-8சங் 25:22சங் 26:11சங் 35:2

உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும்.