சங்கீதங்கள் 144

Psalms 144
சங்கீதம் 144

தாவீதின் பாடல்.

என்னுடைய கைகளைப் போருக்கும் சங் 18:342 சாமு 22:35சங் 18:2சங் 44:3-4எபே 6:10-112 கொரி 10:4உபா 32:30-31ஏசா 45:24

என்னுடைய விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்னுடைய கன்மலையாகிய யெகோவாவுக்கு நன்றி.

அவர் என்னுடைய தயாபரரும், 2 சாமு 22:2-3சங் 18:2சங் 91:2சங் 59:9எரே 16:19சங் 18:47சங் 84:92 சாமு 22:40-48

என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும்,

என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும்,

நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார்.

யெகோவாவே, மனிதனை நீர் கவனிக்கிறதற்கும், சங் 8:4யோபு 7:17எபி 2:6யோபு 15:14சங் 146:3-4

மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

மனிதன் மாயைக்கு ஒப்பாக இருக்கிறான்; சங் 102:11யோபு 8:9சங் 109:23சங் 39:5-62 சாமு 14:14பிரச 12:81 நாளாக 29:15பிரச 1:14

அவனுடைய நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.

யெகோவாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, சங் 104:32சங் 18:9யாத் 19:18ஆப 3:3-6எபி 12:18ஏசா 64:1-2நாகூ 1:3-6

மலைகள் புகையும்படி அவைகளைத் தொடும்.

மின்னல்களை வரவிட்டு எதிரிகளைச் சிதறடியும், உபா 32:23சங் 18:13-14உபா 32:422 சாமு 22:12-15சங் 21:12சங் 45:5சங் 7:12-13சங் 77:17-18

உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கச்செய்யும்.

உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, சங் 18:16சங் 69:1-2சங் 54:3வெளி 17:152 சாமு 22:17மத் 27:43சங் 18:44சங் 93:3-4

பெருவெள்ளத்திற்கு என்னை விலக்கி இரட்சியும்.

மாயையைப் பேசும் வாயும், சங் 12:2ஏசா 44:20சங் 41:6சங் 62:4உபா 32:40ஆதி 14:22ஏசா 59:5-7மத் 5:30

கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு

என்னை விலக்கித் தப்புவியும்.

யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; சங் 33:2-3சங் 40:3சங் 149:1சங் 150:3-5சங் 81:1-31 நாளாக 25:1-6சங் 108:2-3சங் 98:1

தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, சங் 18:50சங் 140:7சங் 33:16-181 சாமு 17:45-462 சாமு 21:16-172 சாமு 5:19-252 சாமு 8:6-14ஏசா 45:1-6

ஊழியனாகிய தாவீதைப் பொல்லாத வாளுக்குத் தப்புவிக்கிறவர்.

மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும். சங் 144:7-8ஏசா 44:20சங் 12:22 சாமு 10:6-192 சாமு 16:5-142 சாமு 17:1-14

அப்பொழுது எங்களுடைய மகன்கள் இளமையில் ஓங்கி வளருகிற மரக்கன்றுகளைப்போலவும், சங் 128:31 பேது 3:3-6ஏசா 44:3-5சங் 115:14-15யோபு 42:15உன்னத 8:8-9புலம் 4:2ஏசா 3:16-24

எங்களுடைய மகள்கள் சித்திரந்தீர்ந்த அரண்மனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.

எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்; உபா 7:13-14உபா 28:8உபா 28:4லேவி 26:10உபா 8:3ஆதி 30:29-31லேவி 26:5லூக் 12:16-20

எங்களுடைய கிராமங்களில் எங்களுடைய ஆடுகள் ஆயிரமும் பத்தாயிரமாகப் பலுகும்.

எங்களுடைய எருதுகள் பலத்தவைகளாக இருக்கும்; சகரி 8:3-5உபா 28:71 சாமு 13:17-231 சாமு 31:7உபா 28:25ஏசா 24:11நியாயாதி 5:8நியாயாதி 6:3

எதிரி உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இருக்காது;

எங்களுடைய வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.

இந்த வித ஆசீர்வாதத்தைப்பெற்ற மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; சங் 33:12எபே 1:3சங் 146:5உபா 33:29சங் 65:4சங் 89:15

யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற மக்கள் பாக்கியமுள்ளது.