இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.
தேவனே, பூமியில் உம்முடைய வழியும், சங் 4:62 கொரி 4:6எண் 6:24-27சங் 4:1சங் 119:135சங் 31:16சங் 80:1-3சங் 80:19
எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக,
தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, தீத் 2:11சங் 98:2-3அப் 18:25ஏசா 52:10லூக் 2:30-31லூக் 3:6சங் 43:5அப் 13:10
உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா)
தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; சங் 67:5சங் 74:21ஏசா 38:18-19சங் 119:175சங் 45:17சங் 142:7
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்; சங் 98:9ரோம 15:10-11சங் 9:8ஏசா 42:10-12ஏசா 24:14-16சங் 138:4-5சங் 82:6உபா 32:43
ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து,
கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா)
தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; சங் 67:3மத் 6:9-10
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். லேவி 26:4யாத் 3:15எசேக் 34:26-27ஆதி 17:7ஓசி 2:21-22ஏசா 30:23-24எரே 31:33சங் 85:9-12
தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; சங் 22:27ஏசா 45:22அப் 13:26அப் 13:47ஆதி 12:2-3மல்கி 1:11சங் 65:5வெளி 15:4
பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.