ஆசாப் பாடின மஸ்கீல் என்னும் பாடல்.
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உபா 29:20சங் 100:3சங் 79:13யோவா 10:26-30எசேக் 34:31சங் 44:9எரே 23:1எரே 31:37
உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், எரே 10:16உபா 32:9யாத் 15:13யாத் 15:16உபா 4:20சங் 135:4சங் 78:68-69அப் 20:28
நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும்,
நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும்.
நெடுங்காலமாகப் பாழாகக்கிடக்கிற இடங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளச்செய்யும்; புலம் 1:10தானி 9:17சங் 79:1ஏசா 64:10-11லூக் 21:24மாற் 11:172 சாமு 22:39-43தானி 11:31
பரிசுத்தஸ்தலத்திலே எதிரி அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.
உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, புலம் 2:7மத் 24:152 நாளாக 36:17தானி 6:27எண் 2:2எரே 6:1-5லூக் 13:1லூக் 21:20
தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பெயர்பெற்றவனானான். 1 இராஜா 5:62 நாளாக 2:14எரே 46:22-23
இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும், 1 இராஜா 6:181 இராஜா 6:291 இராஜா 6:321 இராஜா 6:35
சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள்.
உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, 2இராஜா 25:9உபா 12:5எசேக் 24:21ஏசா 64:11மத் 22:7சங் 89:391 இராஜா 8:20யாத் 20:24
உமது பெயரின் வாசஸ்தலத்தைத் தரைவரை இடித்து,
அசுத்தப்படுத்தினார்கள்.
அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, சங் 83:42இராஜா 2:32இராஜா 2:52இராஜா 4:23எஸ்த 3:8-9மத் 4:23சங் 137:72 நாளாக 17:9
தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.
எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; ஆமோ 8:11எசேக் 7:261 சாமு 3:1புலம் 2:9யாத் 12:13யாத் 13:9-10எசேக் 20:12மீகா 3:6
தீர்க்கதரிசியும் இல்லை;
இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? சங் 89:50-51வெளி 6:10தானி 12:6சங் 13:1-2சங் 44:16சங் 79:12சங் 79:4-5சங் 89:46
பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; புலம் 2:3ஏசா 64:12சங் 78:65-66சங் 44:23
அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற ஏசா 33:22சங் 44:4யாத் 19:5-61 சாமு 19:5யாத் 15:2-15ஆப 3:12-14ஏசா 63:8நியாயாதி 4:23-24
தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, யாத் 14:21சங் 78:13எசேக் 29:3ஏசா 51:9-10எசேக் 32:2யாத் 14:28ஏசா 11:15-16நெகே 9:11
தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின் 1 தலைகளை உடைத்தீர்.
தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, ஏசா 27:1யோபு 41:1-34சங் 72:9சங் 104:25-26யோபு 3:8எண் 14:9யாத் 12:35-36யாத் 14:30
அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; எண் 20:11யாத் 17:5-6ஏசா 48:21யோசு 3:13-17சங் 105:41ஏசா 44:27யோசு 2:102இராஜா 2:14
மகா நதிகளையும் வற்றிப்போகச்செய்தீர்.
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; ஆதி 1:3-5மத் 5:45சங் 136:7-9ஆதி 1:14-18சங் 104:19சங் 19:1-6சங் 8:3
தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்; உபா 32:8அப் 17:26அப் 14:17ஆதி 8:22சங் 24:1-2
கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர்.
யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும், சங் 39:8உபா 32:6வெளி 16:19உபா 32:27எசேக் 20:14ஏசா 37:23-24ஏசா 62:6-7சங் 137:7
மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்; உன்னத 2:14யாக் 2:5-6மத் 10:16சங் 9:18ஏசா 60:8சங் 68:10சங் 68:13சங் 72:2
உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும்.
உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; ஆதி 17:7-8சங் 106:45எபி 8:10எரே 33:20-26சங் 105:8சங் 89:28சங் 89:34-36உபா 12:31
பூமியின் இருளான இடங்கள்
கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே.
துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்; சங் 12:5எஸ்றா 3:11சங் 103:6சங் 35:10சங் 9:18ஏசா 45:17எரே 33:11சங் 102:19-21
சிறுமையும் எளிமையுமானவன் உமது பெயரைத் துதிக்கும்படி செய்யும்.
தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; சங் 74:18ஏசா 52:5சங் 53:1சங் 75:4-5சங் 79:9-10சங் 9:19-20சங் 89:50-51
மதியீனனாலே தினந்தோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்; ஏசா 37:29சங் 65:7வெளி 17:14யோனா 1:2புலம் 2:16சங் 10:11-12சங் 13:1சங் 2:1-2
உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது.