ஆசாபின் துதிப் பாடல்.
தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து, 2 நாளாக 36:19புலம் 1:10மீகா 3:12சங் 74:1-4எரே 26:18சங் 74:7-82 நாளாக 36:172 நாளாக 36:3-4
உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி,
எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.
உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும், எரே 7:33எரே 34:20எரே 16:4உபா 28:26எரே 19:7எரே 15:3
உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.
எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; எரே 14:16எரே 16:4வெளி 11:9எரே 15:3எரே 25:33எரே 34:20எரே 8:1-2மத் 23:35
அவர்களை அடக்கம்செய்பவருமில்லை.
எங்களுடைய அயலாருக்கு நிந்தையும், சங் 80:6எசேக் 36:15புலம் 5:1சங் 89:411 இராஜா 9:7தானி 9:16உபா 28:37எசேக் 35:12
எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம்.
எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ? சங் 89:46சங் 74:1சங் 85:5உபா 29:20செப்ப 3:8எசேக் 36:5சங் 13:1-2சங் 74:9-10
உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ?
உம்மை அறியாத தேசங்கள் மேலும், எரே 10:252 தெச 1:8சங் 14:4சங் 53:4சங் 69:24ஏசா 45:4-5ரோம 1:28அப் 17:23
உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும்,
உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்.
அவர்கள் யாக்கோபை அழித்து, எரே 51:34-35சகரி 1:15ஏசா 24:1-12ஏசா 64:10-11எரே 50:72 நாளாக 36:21சங் 80:13ஏசா 9:12
அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
முன்னோர்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாமலிரும்; ஏசா 64:9சங் 116:6சங் 142:6வெளி 18:5சங் 21:3ஓசி 9:9மத் 23:32-361 இராஜா 17:18
உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாக எங்களுக்கு நேரிடுவதாக;
நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.
எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து, எரே 14:72 நாளாக 14:11சங் 25:11எரே 14:21எசேக் 20:14ஏசா 48:9தானி 9:19எசேக் 20:9
உமது பெயருக்காக எங்களை விடுவித்து,
எங்களுடைய பாவங்களை மன்னியும்.
அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்? சங் 42:10யாத் 6:7யாத் 7:5எசேக் 39:21-22மீகா 7:10சங் 115:2சங் 42:3சங் 94:1
உமது ஊழியக்காரர்களுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பழிவாங்குதல்
தேசங்களுக்குள்ளே எங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.
கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; சங் 102:20ஏசா 42:7ஏசா 33:2சங் 146:6-7யாத் 2:23-24சங் 12:5சங் 69:33எபே 3:20
கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும்.
ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஆதி 4:15எரே 32:18லேவி 26:21லேவி 26:28நீதி 6:31சங் 74:18-22லூக் 6:38ஏசா 65:5-7
ஏழு மடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச்செய்யும்.
அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; ஏசா 43:21சங் 95:7சங் 100:3சங் 74:1சங் 145:4சங் 44:8சங் 45:17சங் 74:18
தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.