இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்று உணர்த்தியபோது இது பாடப்பட்டது.
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், அப் 3:19ஏசா 44:22ஏசா 43:25சங் 51:9கொலோ 2:14சங் 69:162 சாமு 11:2எபே 1:6-8
உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, 1 யோவா 1:7-9எபி 10:21-22எசேக் 36:25எரே 4:14சங் 51:7ஏசா 1:16வெளி 1:51 கொரி 6:11
என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும்.
என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; நீதி 28:13ஏசா 59:12சங் 38:18சங் 32:5லேவி 26:40-41லூக் 15:18-21எரே 3:25யோபு 33:27
என்னுடைய பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து, 2 சாமு 12:13-14லூக் 15:21ஆதி 20:6ஆதி 39:9ரோம 3:4அப் 17:31வெளி 16:5ஆதி 9:6
உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை செய்தேன்;
நீர் பேசும்போது உம்முடைய நீதி வெளிப்படவும், நீர் நியாயந்தீர்க்கும்போது,
உம்முடைய பரிசுத்தம் வெளிப்படவும் இதை அறிக்கையிடுகிறேன்.
இதோ, நான் அநீதியில் உருவானேன்; ரோம 5:12யோபு 14:4சங் 58:3யோபு 15:14-16எபே 2:3யோவா 3:6ஆதி 5:3ஆதி 8:21
என்னுடைய தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; 1 சாமு 16:7சங் 15:21 பேது 3:4ரோம 7:22யோபு 38:36நீதி 2:6யாக் 4:8லூக் 11:39
உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், 1 யோவா 1:7ஏசா 1:18எபி 9:13-14எண் 19:18-20எபி 9:19வெளி 1:5எபே 5:26-27யாத் 12:22
அப்பொழுது நான் சுத்தமாவேன்;
என்னைக் கழுவியருளும்;
அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், ஓசி 6:1-2யோபு 5:17-18மத் 5:4சங் 6:2-3சங் 119:81-82சங் 126:5-6லூக் 4:18சங் 30:11
அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் சந்தோஷப்படும்.
என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து, எரே 16:17மீகா 7:18-19கொலோ 2:14ஏசா 38:17சங் 51:1
என்னுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும். எசேக் 11:192 கொரி 5:17எபே 4:22-24மத் 5:8எசேக் 18:31ரோம 12:2எசேக் 36:25-27அப் 15:9
உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், எபே 4:302இராஜா 13:23ஏசா 63:10-11ரோம 8:9ஆதி 6:3யோவா 14:26லூக் 11:13சங் 71:18
உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, ஏசா 41:10சங் 13:5ஏசா 61:102 கொரி 3:17யூதா 1:24லூக் 1:47சங் 119:116-117சங் 35:9
உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; லூக் 22:32அப் 3:19யாக் 5:19-20அப் 26:18-20யோவா 21:15-17அப் 15:3அப் 2:38-41எரே 31:18
பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே, 2 சாமு 12:9சங் 35:28அப் 20:26ஆதி 9:6ஓசி 4:2சங் 26:9ரோம 10:32 சாமு 11:15-17
இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்;
அப்பொழுது என்னுடைய நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடும்.
ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்; எபி 13:15சங் 63:3-5எசேக் 29:21சங் 119:13சங் 9:14யாத் 4:11எசேக் 3:271 சாமு 2:9
அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; ஓசி 6:6சங் 40:6எபி 10:5-61 சாமு 15:22சங் 51:6ஏசா 1:11-15நீதி 21:27ஆமோ 5:21-23
தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; சங் 34:18ஏசா 66:2சங் 147:3லூக் 15:10மாற் 12:33மத் 5:32 நாளாக 33:12-13சங் 102:17
தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை.
சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; சங் 102:16பிலி 2:13எபே 1:5லூக் 12:32சங் 122:6-9சகரி 2:52 தெச 1:11ஏசா 51:3
எருசலேமின் மதில்களைக் கட்டும்.
அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய சங் 4:5எபே 5:2மல்கி 3:3சங் 66:13-15ரோம 12:1சங் 118:27
நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்;
அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.