சங்கீதங்கள் 68

Psalms 68
சங்கீதம் 68

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.

தேவன் எழுந்தருளுவார், அவருடைய எதிரிகள் சிதறி, எண் 10:35ஏசா 51:9-10ஏசா 42:13-14சங் 44:26சங் 89:10எசேக் 12:14-15சங் 132:8-9ஏசா 33:3

அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மீகா 1:4ஓசி 13:3சங் 37:20ஏசா 9:18சங் 97:5வெளி 6:16-17சங் 80:162 தெச 1:8-9

மெழுகு நெருப்புக்கு முன்பு உருகுவதுபோல துன்மார்க்கர்கள் தேவனுக்குமுன்பாக அழிவார்கள்.

நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, சங் 64:101 தெச 5:16சங் 100:1-2வெளி 18:201 பேது 1:8சங் 95:1-2உபா 12:12சங் 43:4

ஆனந்த சந்தோஷமடைவார்கள்.

தேவனைப் பாடி, அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; உபா 33:26ஏசா 12:4-6சங் 66:4சங் 104:3சங் 66:2சங் 68:33யாத் 6:3ஏசா 40:3

வனாந்திரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்;

அவருடைய பெயர் யெகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.

தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், எரே 49:11சங் 10:14உபா 10:18சங் 82:3-4சங் 146:9எரே 5:28லூக் 18:2-7சங் 72:4

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார்.

தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, சங் 113:9சங் 69:33சங் 107:10ஏசா 61:1சங் 107:14சங் 146:7சங் 107:40-41கலா 4:27

கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்;

துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.

தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா) யாத் 13:21நியாயாதி 5:4நியாயாதி 4:14ஆப 3:12-13உபா 4:34மீகா 2:13சங் 114:1-8

பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; யாத் 19:18யாத் 19:16உபா 5:23-25நியாயாதி 5:4-5எபி 12:26ஏசா 45:3சங் 41:13சங் 68:35

இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.

தேவனே, சம்பூரண மழையைப் பெய்யச்செய்தீர்; உபா 11:14எசேக் 34:26சங் 65:9-13சங் 78:24-27உபா 11:10-12சங் 77:16-17

இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.

உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; உபா 26:9-10சங் 74:191 சாமு 2:8லூக் 1:53மத் 11:51 பேது 5:3உபா 26:5உபா 32:8-14

தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.

ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரபலப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. யாத் 15:20சங் 40:3சங் 68:25யாத் 17:9-16யாத் 14:15நியாயாதி 4:6வெளி 19:13எபே 4:11

சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; யோசு 10:16நியாயாதி 5:191 சாமு 30:24யோசு 12:7-24வெளி 19:17-20யாத் 14:25நியாயாதி 5:30யோசு 10:42

வீட்டிலிருந்த பெண் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.

நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாக இருந்தாலும், ஆதி 49:14சங் 105:371 கொரி 6:9-11எபே 2:1-3நியாயாதி 5:16வெளி 1:5-6தீத் 3:31 இராஜா 4:20-21

வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாவின் இறக்கைகள் 1 போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.

சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, ஏசா 1:18நியாயாதி 2:7நியாயாதி 9:48யோசு 10:10-43சங் 51:7வெளி 19:14-21எரே 2:3யோசு 12:1-24

அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையானது.

தேவ மலை பாசான் மலை போல இருக்கிறது; சங் 87:1-2உபா 3:10ஏசா 2:2-3மீகா 7:14சங் 2:6சங் 78:68-69

பாசான் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது.

உயர்ந்த சிகரமுள்ள மலைகளே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்த மலையில் தங்கியிருக்க தேவன் விரும்பினார்; உபா 12:5சங் 132:13-14வெளி 21:2-3எபி 12:22-231 இராஜா 9:3உபா 12:11ஏசா 2:2சங் 114:4

ஆம், யெகோவா இதிலே என்றென்றைக்கும் தங்கியிருப்பார்.

தேவனுடைய இரதங்கள் பத்தாயிரங்களும், உபா 33:2தானி 7:10வெளி 5:11வெளி 9:16ஆப 3:8மத் 26:532இராஜா 6:16-17யாத் 19:22-23

ஆயிரமாயிரங்களுமாக இருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்ததைபோல அவைகளுக்குள் இருக்கிறார்.

தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, எபே 4:8-102 கொரி 6:16வெளி 21:31 பேது 3:22கொலோ 1:18-19சங் 110:1அப் 1:2-9அப் 2:4

சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்;

தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக,

துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.

எந்த நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; ஏசா 46:4புலம் 3:23எபே 1:3சங் 55:22சங் 103:1-22சங் 32:7சங் 65:5சங் 139:17

நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா)

நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாக இருக்கிறார்; உபா 32:39வெளி 1:18ஏசா 12:2யோவா 5:211 சாமு 2:6சங் 118:17-18சங் 56:13யோவா 11:25-26

ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.

மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும், ஆப 3:13லூக் 13:5சங் 110:6சங் 7:12எசேக் 18:27-30எபி 12:25வெளி 2:14-16எபி 2:1-3

தன்னுடைய அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய முடியுள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.

உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும், எண் 21:33எசேக் 36:24ஆமோ 9:2-3யாத் 14:22யாத் 14:29ஏசா 11:11-16ஏசா 51:10-11ஓசி 1:10-11

உன்னுடைய நாய்களின் நாக்கு அதை நக்கும்படியாகவும்,

என்னுடைய மக்களைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்; 1 இராஜா 21:19சங் 58:101 இராஜா 22:38வெளி 19:17-212இராஜா 9:33-37ஏசா 63:1-6

அதை கடலின் ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.

தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; சங் 47:5-71 நாளாக 13:81 நாளாக 15:16-242 சாமு 6:12-17சங் 24:7-10சங் 63:2

என் தேவனும் என்னுடைய ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள்.

முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், 1 நாளாக 13:8நியாயாதி 11:34யாத் 15:201 சாமு 18:6வெளி 14:2-3வெளி 15:2-3எரே 31:13எரே 31:4

சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.

இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, ஏசா 48:1உபா 33:28நீதி 5:16சங் 111:1சங் 26:121 நாளாக 16:7-36சங் 135:19-21சங் 107:32

சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், 1 சாமு 9:211 நாளாக 12:16ஏசா 11:13சங் 60:71 நாளாக 12:291 நாளாக 15:31 நாளாக 27:12எசேக் 37:19-27

அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும்,

நப்தலியின் பிரபுக்களும் உண்டு.

உன்னுடைய தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; பிலி 1:6சங் 138:8சங் 71:3ஏசா 40:312 கொரி 12:9-10சங் 42:8எபே 3:17-202 தெச 1:11

தேவனே, நீர் எங்களுக்காக உண்டாக்கியதை பலப்படுத்தும்.

எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக, 1 இராஜா 10:101 நாளாக 29:3சங் 76:11ஏசா 18:7ஏசா 60:16-17ஏசா 60:6-11சங் 45:121 இராஜா 10:24-25

ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.

நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், மக்களாகிய கன்றுகளோடுகூட கன்றுகளின் கூட்டத்தையும் அதட்டும்; சங் 22:12-13சங் 89:10ரோம 7:222 நாளாக 14:1-152 நாளாக 20:1-372 சாமு 10:1-192 சாமு 8:1-18எசேக் 29:3

ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்;

யுத்தங்களில் பிரியப்படுகிற மக்களைச் சிதறடிப்பார்.

பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; ஏசா 45:14செப்ப 3:10அப் 8:27-40ஏசா 19:18-25சங் 44:20ஏசா 60:6-7சங் 143:6சங் 72:8-11

எத்தியோப்பியா தேவனை நோக்கி கையை உயர்த்த துரிதப்படும்.

பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா) உபா 32:43சங் 117:1-2சங் 67:2-5ரோம 15:10-11சங் 100:1வெளி 15:4சங் 102:22

ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; சங் 104:3சங் 18:10சங் 68:41 இராஜா 8:27வெளி 11:19உபா 33:26யோவா 12:28-29சங் 93:2

இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார்.

தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்; 1 நாளாக 16:28-292 பேது 1:17வெளி 19:6சங் 150:1உபா 33:26சங் 29:1-2சங் 96:6-8

அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.

தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்; சங் 29:11கொலோ 1:11பிலி 4:13ஏசா 40:29சங் 65:5சகரி 10:12நெகே 1:5வெளி 6:16-17

இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்;

தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.