இசைத் தலைவனுக்கு யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் யெகோவா அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல்.
என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன். 2 சாமு 22:1-51கொலோ 1:111 யோவா 4:19ஏசா 12:1-6பிலி 4:13சங் 116:1-6சங் 34:19சங் 118:14
யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், சங் 144:2சங் 62:7நீதி 18:10சங் 19:14சங் 91:2சங் 62:22 சாமு 22:3எரே 16:19
என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும்,
என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும்,
என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார்.
துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; சங் 91:15லூக் 1:71சங் 62:8ரோம 8:31-392 சாமு 22:4சங் 145:3சங் 55:16சங் 96:4
அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன்.
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது. சங் 116:32 கொரி 1:9மத் 27:24-25மாற் 14:33-342 சாமு 22:5-6ஏசா 53:3-4யோனா 2:2-7மத் 26:47
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; சங் 86:13அப் 2:24சங் 88:15-17சங் 88:3-8பிரச 9:12சங் 116:3
மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.
எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், சங் 50:152 சாமு 22:7சங் 34:15சங் 130:1-2சங் 120:1சங் 18:3-4சங் 27:4-52 நாளாக 30:27
என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்,
என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய்,
அவர் காதுகளில் விழுந்தது.
அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, அப் 4:31எசேக் 38:19-20சங் 68:7-8அப் 16:25-26உபா 32:22நியாயாதி 5:4எரே 4:241 கொரி 13:2
மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, சங் 21:9சங் 11:6நாகூ 1:5-6ஆமோ 4:11தானி 7:10ஆதி 19:28லேவி 10:2எண் 16:35
அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது;
அதனால் தழல் மூண்டது.
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; சங் 144:5-152 பேது 3:102 சாமு 22:10உபா 33:26உபா 5:22-23எபி 12:26யோவா 13:7யோவே 3:16
அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
கேருபீன்மேல் 1 ஏறி வேகமாகச் சென்றார்; சங் 104:32 சாமு 22:11-12சங் 99:1எசேக் 1:5-14எசேக் 10:20-22சங் 80:1
காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார்.
இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; உபா 4:11சங் 97:2யோவே 2:2சங் 81:7சங் 91:1சங் 27:5
தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார்.
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், யோசு 10:11வெளி 16:21யாத் 9:23-24மத் 17:2மத் 17:52 சாமு 22:13-15ஆப 3:4-5சங் 104:2
கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன.
யெகோவா வானங்களிலே குமுறினார், சங் 104:71 சாமு 7:10சங் 140:10சங் 29:3-4உபா 32:24யாத் 20:18எசேக் 10:5ஆப 3:5
உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்;
கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன. 2
தம்முடைய அம்புகளை எய்து, சங் 144:6ஆப 3:11உபா 32:23உபா 32:42ஏசா 30:30யோபு 6:4யோசு 10:10எண் 24:8
அவர்களைச் சிதறடித்தார்;
மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார்.
அப்பொழுது யெகோவாவே, சங் 106:9யாத் 15:8யோபு 4:9மீகா 6:2சங் 76:62 சாமு 22:16எரே 31:37யோசு 3:13-16
உம்முடைய கண்டிப்பினாலும்
உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன,
உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.
உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, 2 சாமு 22:17சங் 144:7யோனா 2:5-6சங் 57:3சங் 18:43யாத் 2:10சங் 32:6சங் 40:1-3
பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.
என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் எபி 2:14-15யோபு 16:9சங் 142:6சங் 35:10சங் 69:4-14எபே 6:10-12சங் 118:72 சாமு 22:1
என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; ஒபதி 1:10-14உபா 32:35எரே 18:17சங் 46:11சங் 59:161 சாமு 30:62 சாமு 22:19சங் 46:1-2
யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், சங் 118:5சங் 31:8சங் 18:36யோபு 36:16சங் 40:22 சாமு 22:18-27சங் 37:231 இராஜா 10:9
விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து,
என்னைத் தப்புவித்தார்.
யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; சங் 24:41 கொரி 3:8மத் 6:4சங் 58:11யோபு 22:30நீதி 11:18எபி 7:26ஏசா 49:4
என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.
ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; சங் 119:1021 யோவா 2:19அப் 24:16நீதி 8:32சங் 17:4சங் 26:11 தெச 2:102 நாளாக 34:33
நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; சங் 119:13சங் 119:112சங் 119:30சங் 119:117சங் 119:128யோவா 5:14
அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, மத் 18:8-9மத் 5:29-301 நாளாக 29:171 சாமு 26:23சங் 11:7சங் 17:3சங் 37:27சங் 7:1-8
என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், மத் 10:41-42ரூத் 2:121 சாமு 26:23எபி 6:162 தெச 1:6-7
தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற
என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், மத் 5:7சங் 62:12மத் 18:33-351 இராஜா 8:32எசேக் 18:25-30நெகே 9:17சங் 112:4-6சங் 41:1-4
உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
புனிதனுக்கு நீர் புனிதராகவும், நீதி 3:34லேவி 26:23-24யாக் 2:13லேவி 26:27-28சங் 109:17-19ரோம 2:4-6ரோம 2:9
மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; ஏசா 66:2ஏசா 57:15யாக் 2:52 சாமு 22:28சங் 101:52 கொரி 8:9ஏசா 3:9சங் 9:18
மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; 2 சாமு 22:29யோபு 29:3ஏசா 42:16மத் 4:161 பேது 2:9லூக் 1:79நீதி 20:27சங் 112:4
என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார்.
உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்; 2 சாமு 22:30எபே 6:10-132 கொரி 12:9-10வெளி 3:21கொலோ 2:151 கொரி 15:102 சாமு 5:19-20சங் 144:10
என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
தேவனுடைய வழி உத்தமமானது; உபா 32:4நீதி 30:52 சாமு 22:31சங் 84:11-12சங் 12:6வெளி 15:3சங் 19:7-10சங் 119:140
யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது;
தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
யெகோவாவை தவிர தேவன் யார்? உபா 32:31சங் 86:82 சாமு 22:32உபா 32:39ஏசா 45:51 சாமு 2:2ஏசா 45:21-22
நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்?
என்னைப் பலத்தால் இடைகட்டி, ஏசா 45:52 கொரி 3:52 சாமு 22:33சங் 28:7சங் 91:2சங் 93:1
என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, ஆப 3:19உபா 32:13உபா 33:292 சாமு 2:182 சாமு 22:14
உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார்.
வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, சங் 144:1சங் 46:92 சாமு 22:36ஏசா 28:6ஏசா 45:1எரே 49:35ஓசி 1:5
என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; 2 சாமு 22:36யாக் 3:17-18சங் 28:7கலா 5:22-232 கொரி 10:1உபா 33:29ஏசா 40:11சங் 17:7
உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது;
உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும்.
என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். நீதி 4:122 சாமு 22:37யோபு 36:16சங் 4:1யோபு 18:7லூக் 12:50லூக் 24:46-48
என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து, ஏசா 53:10-12சங் 44:5ஏசா 63:1-6எண் 24:17-19சங் 118:11-12சங் 3:7சங் 35:2சங் 35:5
அவர்களைப் பிடித்தேன்;
அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை.
அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன். 1 சாமு 17:49-511 சாமு 23:52 சாமு 10:1-192 சாமு 18:7-82 சாமு 21:15-222 சாமு 22:392 சாமு 5:1-252 சாமு 8:1-18
போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, 2 சாமு 22:40-41சங் 18:321 கொரி 15:25-28எபே 1:22ஏசா 45:141 நாளாக 22:18எசேக் 30:24-25யோவா 15:23
என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர்.
நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி, சங் 21:12சங் 94:23
என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
அவர்கள் கூப்பிடுகிறார்கள், நீதி 1:28யோபு 27:92 சாமு 22:42-43எசேக் 8:18ஓசி 7:14ஏசா 1:15ஏசா 59:1-2எரே 11:11
அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை;
யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்,
அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.
நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, ஏசா 10:62இராஜா 13:7ஏசா 41:15-16சகரி 10:5ஏசா 25:10ஏசா 41:2மல்கி 4:3சங் 50:22
தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், ஏசா 55:52 சாமு 3:11 பேது 2:10ஏசா 52:152 சாமு 19:9எபே 1:222 சாமு 22:44-46அப் 5:31
தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்;
நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள்.
அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; சங் 66:3சங் 81:152 சாமு 22:44-46உபா 33:292 சாமு 1:13எசேக் 44:7ஏசா 62:8சங் 68:30
அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள்.
அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள். மீகா 7:17ஏசா 24:4யாக் 1:11வெளி 6:16
யெகோவா உயிருள்ளவர்; 2 சாமு 22:47சங் 18:2சங் 57:5வெளி 1:18எரே 10:10யோவா 14:19லூக் 1:47சங் 68:20
என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக;
என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். சங் 47:3ரோம 12:192 சாமு 22:48நாகூ 1:2சங் 144:2உபா 32:35
அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.
அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; சங் 140:1சங் 140:11சங் 140:4சங் 86:14சங் 59:1-2சங் 7:16பிலி 2:9சங் 22:27-30
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி,
கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, ரோம 15:92 சாமு 22:50-511 தீமோ 6:13மத் 26:30சங் 108:1சங் 108:3சங் 138:4சங் 14:7
உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன்.
தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, சங் 144:102 சாமு 7:13சங் 132:10சங் 89:3-4அப் 2:34-36ஏசா 9:6-7லூக் 1:31-33சங் 78:71-72
தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும்
அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.